தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜனநாயகத்தை பின்னுக்கு தள்ளுவதால் நாடு தழுவிய போராட்டம் - கபில் சிபல்

டெல்லி: பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் இந்திய ஜனநாயகத்தை பின்னுக்கு தள்ளுவதால் மக்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்துவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் கூறியுள்ளார்.

Kapil Sibal
கபில் சிபல்

By

Published : Jan 21, 2020, 8:23 PM IST

இதுகுறித்து மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கபில் சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில்,

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் இந்திய ஜனநாயகத்தை பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பின்னுக்கு தள்ளுவதால் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தின் வழியாக தங்கள் எதிர்ப்பலைகளை வெளிப்படுத்தினர்.

இந்தியாவின் 2019ஆம் ஆண்டின் ஜிடிபி எதிர்பார்த்ததைவிட 4.8 விழுக்காடாக குறைந்தது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பொருளாதரத்தின் வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளவுள்ள இருக்கும் சூழலில் கபிலின் இந்த கருத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது 4.8ஆக இருக்கும் இந்திய ஜிடிபி, 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.8 விழுக்காடாக உயரும் என்றும், அதேபோல் 2021ஆம் ஆண்டு 6.5 விழுக்காடுவரை உயரும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க: சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு: தெருவெங்கும் தேசியக்கொடியை தூக்கிப் பேரணி

ABOUT THE AUTHOR

...view details