கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனை மீட்டெடுக்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்குவிப்பு திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று விவரித்தார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் பெறுவதற்கான உத்தரவாதத்தை அரசே வழங்கும் என்பன போன்ற பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்தார்.
பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் குறித்து பேசிய அமித் ஷா, வேலைவாய்ப்பை உருவாக்கி சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்கும் வகையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில் நடவடிக்கைகளை எடுத்த பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி. வேலை வாய்ப்பை உருவாக்கி சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது என்பது இதன்மூலம் தெரியவருகிறது.