புதுச்சேரி சின்னையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் கதர்வாரிய பிரிவில் பணியாற்றிவருகின்றார். ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் லக்ஷ்மி நாராயணனின் தீவிர ஆதரவாளரான இவர், பணி முடித்துவிட்டு நேற்று (செப் 7) மாலை வாழைகுளம் பகுதி வழியாக சின்னையாபுரம் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கழுத்து தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டியதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
காங்கிரஸ் எம்எல்ஏவின் தீவிர ஆதரவாளர் வெட்டிப் படுகொலை
புதுச்சேரி: காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரின் தீவிர ஆதரவாளர் அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
MLA radical supporter hacked to death in Puducherry
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை காவல் துறையினர் கணேசன் உடலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். இக்கொலை குறித்து வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.