தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 6, 2019, 12:08 PM IST

ETV Bharat / bharat

தீபாவளிக்கு பசுமை பட்டாசுகள்: மத்திய அரசு அறிமுகம்!

டெல்லி: தீபாவளியை முன்னிட்டு மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பசுமை பட்டாசுகளை மக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

காலம் காலமாக பயன்படுத்தி வந்த வழக்கமான சல்பர் வேதியியல் அதிகம் உள்ள பட்டாசுகள் காற்று மாசை அதிகம் ஏற்படுத்துவதாகக் கூறி கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அதற்கு தடைவிதித்தது.

இதைத்தொடர்ந்து தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் தடை செய்யப்பட்ட பழைய பட்டாசுகளுக்கு பதில் பசுமை பட்டாசுகளை உருவாக்கியது. அது இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு மக்களின் பயன்பாட்டிற்காக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிமுகம் செய்து வைத்தார்.

இதுகுறித்து ஹர்ஷ் வர்தன் தெரிவிக்கையில், ‘இந்த பட்டாசுகள் சென்ற ஆண்டு விற்பனைக்கு வந்திருக்க வேண்டியது, சில பல சட்ட சிக்கல்களால் அதில் கால தாமதம் ஏற்பட்டு இந்தாண்டு விற்பனைக்கு வந்துள்ளது. டெல்லி போன்ற அதிக காற்று மாசு உள்ள பகுதிகளில் இந்த பட்டாசு சுற்றுச்சூழலுக்கு பயனுள்ளதாக இருக்கும்’ என்று கூறினார்.

மேலும் படிக்க:நெருங்கும் தீபாவளி: கோ-ஆப்டெக்ஸின் அதிரடி மூவ்...!

ABOUT THE AUTHOR

...view details