தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மீலாதுநபி: புதுச்சேரியில் 5 மணி நேரம்  மதுபான கடைகள் அடைப்பு

புதுச்சேரி: மீலாதுநபி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் இன்று ஐந்து மணிநேரம் மதுபான கடைகள் அடைக்கப்படுவதாக அம்மாநில கலால் துறை தெரிவித்துள்ளது.

மீலாது நபி: புதுச்சேரியில் 5 மணி நேரம்  மதுபான கடைகள் அடைப்பு
மீலாது நபி: புதுச்சேரியில் 5 மணி நேரம்  மதுபான கடைகள் அடைப்பு

By

Published : Oct 30, 2020, 3:11 PM IST

புதுச்சேரி அரசின் கலால் துறை காந்தி ஜெயந்தி, வள்ளலார் தினம், மகாவீர் ஜெயந்தி, திருவள்ளுவர் நாள், மீலாதுநபி ஆகிய நாள்களில் மதுக்கடைகளைத் திறக்க தடைவிதித்துள்ளது. இந்நிலையில் இன்று மீலாதுநபி கொண்டாடப்படுகிறது. இருந்தபோதிலும், புதுச்சேரியில் அனைத்து மதுக்கடைகளும், மதுபார்களும் வழக்கம்போல திறக்கப்பட்டிருந்தன.

இது குறித்து விசாரித்தபோது, மீலாதுநபிக்கு கடைகளைத் திறக்கலாம் எனத் தலைமைச் செயலாளர் துறை அமைச்சருக்கு கோப்பு அனுப்பியிருந்தார். ஆனால் அமைச்சர் நமச்சிவாயம் மத ரீதியான பண்டிகை என்பதால் வழக்கம்போல மதுக்கடைகளை அடைக்க உத்தரவிடும்படி தெரிவித்தார். ஆனால் மதுக்கடைகளைத் திறக்க கலால் துறை அனுமதித்தது.

இதனால் புதுவையில் மதுபான கடைகள், பார்கள் வழக்கம்போல திறக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மதியம் ஒரு மணிக்கு திடீரென மதுபான கடைகள் மூடப்பட்டன. இதனால் மது வாங்க வந்தவர்கள் பரபரப்படைந்தனர்.

மதுபான கடைகளை அடைக்கச்சொல்லி உத்தரவு வந்திருப்பதாகக் கூறிய ஊழியர்கள் வாடிக்கையாளர்களை வெளியே விரட்டி அவசர, அவசரமாக கடைகளை அடைத்தனர்.

இதனிடையே, மீலாதுநபி பண்டிகையையொட்டி இன்று பிற்பகல் 1 மணி மாலை 6 மணி வரை மதுபான கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் எனக் கலால் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details