தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா உடனான வர்த்தகம் வலுப்படுத்தப்படும்: அமெரிக்க நம்பிக்கை

டெல்லி: அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ அரசுமுறைப் பயணமாக வரும் ஜூன் 25ஆம் தேதி இந்தியா வருகிறார் என்றும், அப்போது அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேசி சுமுக முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

india us

By

Published : Jun 22, 2019, 8:54 AM IST

இந்தியாவின் நியாயமற்ற வர்த்தக செயல்பாடுகளால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று இந்தியாவுக்கு டிரம்ப் அரசு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்தியாவைப் பற்றி கவலைப்பட்டு நேரத்தை வீணடித்து விட்டோம் என்றும், இந்தியாவுடன் வர்த்தக ரீதியாக நீடிக்கும் சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றும் அமெரிக்காவின் வர்த்தகத் துறை பிரதிநிதி ராபர்ட் லைட்தைசர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு எந்த நாட்டையும் விட அதிக அளவிலான வரிகளை இந்தியா விதித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தது.

கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி ட்ரம்ப் வெளியிட்ட எச்சரிக்கையில் இந்தியாவுக்கு வழங்கப்படும் சிறப்புச் சலுகைகள் நிறுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ வரும் 25ஆம் தேதி முதல் 27 வரை அரசுமுறைப் பயணமாக வரும் நிலையில் இப்பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டு, சுமுகமான முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details