கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு, 4 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரி தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.
பொது ஊரடங்கால் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்பதை அறிந்த அரசாங்கம், ஊரடங்கில் சில தளர்வுகளைக் கொண்டு வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு கல்வி மிகவும் அவசியம் என்பதால் ஒத்திவைக்கப்பட்ட 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நிபந்தனைகளுடன் நடத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுமதித்துள்ளார்.
இது குறித்து மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், 'ஊரடங்கு அமலில் இருப்பதால், பள்ளிகள் திறக்க அனுமதி கிடையாது. ஆனால், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நடத்தலாம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநில பாடத்திட்டம், மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்து பாடத்திட்டங்களுக்கும் தேர்வுகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆப்பிள் ஐஓஎஸ் 14 இயங்குதளத்தின் ஆகுமெண்டட் ரியாலிட்டி செயலி குறித்த தகவல் கசிவு!