சீனா மற்றம் பல்வேறு உலக நாடுகளில் கரோனா வைரஸ் என்ற தொற்று நோய் மிக வேகமாக பரவிவருகிறது. இதன் காரணமாக சீனாவில் மட்டும் இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இந்த அபாயகரமான சூழலில், கரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருத்தப்படும் சீனாவில் ஹூபே மாகாணத்தில் தங்கியிருக்கும் இந்தியர்களை வெளியேற்றும் பணியை இந்திய வெளியுறவுத் துறை தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், "சீனாவின் கரோனா வைரஸ் பரவிவரும் சூழலில் ஹூபே மாகணத்திலிருந்து இந்தியர்களை வெளியேற்றும் பணியை தொடங்கியுள்ளோம். இந்திய தூதரகம் சீனா அரசு அலுவலர்களின் உதவியோடு அதற்கான வழிமுறைய ஆராய்ந்து வருகிறது" எனன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.