தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 26, 2019, 10:32 AM IST

ETV Bharat / bharat

இனி அடல் பென்ஷன் திட்டம் மூலம் ரூ.10ஆயிரம் ஓய்வூதியம்!

டெல்லி: அடல் பென்ஷன் திட்டத்தில் அதிகபட்ச ஓய்வூதிய தொகையை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Maximum pension in the Atal pension scheme to rise to 10  இனி அடல் பென்ஷன் திட்டம் மூலம் ரூ.10ஆயிரம் ஓய்வூதியம்  Atal pension scheme to rise to 10000
Atal pension scheme to rise to 10000

அடல் பென்ஷன் திட்டத்தில் அதிகபட்ச ஓய்வூதியத்தை 10,000 ஆக உயர்த்தவும், திட்டத்தில் சேரும் வயதை 50 வரை அதிகரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடல் பென்ஷன் திட்டம் 2015ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதில் 18 வயதுக்கு மேல் 40 வயது வரை சேரலாம். அமைப்பு சாரா துறை சார்ந்தவர்களுக்கு இந்த திட்டத்தில் அரசு தனது சார்பில் ஒரு தொகையை செலுத்தும்.

வங்கி கணக்கு மூலமாகவே, இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே, இதில் சேர வங்கிக்கணக்கு முக்கியம். செலுத்தப்படும் தொகைக்கு ஏற்ப, 60 வயதில் இருந்து குறைந்த பட்சம் 1,000 முதல் 5,000 வரை பென்ஷன் கிடைக்கும். 5,000 பென்ஷன் பெற 18 வயதில் சேர்ந்தால் மாதம் 210, 40 வயதில் சேர்ந்தால் 1,454 செலுத்த வேண்டியிருக்கும்.

பொருளாதார மறுமலர்ச்சிக்கு வலுவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்!

திட்டத்தில் சேரும்போது உள்ள வயதுக்கேற்ப தொகையில் மாறுபாடிருக்கும். முதன் முதலில் இந்த திட்டத்தில் எந்த தேதியில் சேர்கிறோமோ, ஏறக்குறைய அதே தேதியில்தான் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும். திட்டத்தில் சேர்ந்தவர் இறந்து விட்டால், அவர் நியமித்த முதல் வாரிசுதாரருக்கு அதே பென்ஷன் தொகை கிடைக்கும். பின்னர், அவரும் இறந்து விட்டால், இரண்டாவது வாரிசுதாரருக்கு மொத்த தொகையும் வழங்கப்படும்.

புதிய தொழில்முனைவோர் அடைமானம் இல்லாமல் கடன் பெறலாம்!

தற்பொது இத்திட்டத்தில் குறைந்தபட்ச பென்ஷன் தொகையை 10,000 ரூபாயாக உயர்த்தவும், சேரும் வயதை 50 வரை உயர்த்தவும், வரி பலன்களை தற்போது உள்ள ரூ.50,000இல் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக வந்த கோரிக்கைகளின் அடிப்படையில், நிதியமைச்சகம் இதுகுறித்து பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details