இந்தியாவில் கரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்துவருகிறது. இருப்பினும், இதன் காரணமாக மக்கள் அலட்சியமாக இருந்தால் பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளைப் போல இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை ஏற்படக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், பொது இடங்களில் மாஸ்க்குகளை அணிந்து, தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள மண்டி மாவட்டத்தில் உள்ள வேத பிளாஸ்டர் சன்ஸ்தா என்ற நிறுவனம் மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் மாஸ்க்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாஸ்க்குகள் 20 விழுக்காடு பருத்தியையும் 80 விழுக்காடு மறுசுழற்சி செய்யப்பட்ட மாட்டு சாணத்தையும் கொண்டு தயாரிக்கப்பட்டது.