கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி விலகினார். இதையடுத்து, கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். இருப்பினும், ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ”ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது பிரதமர் பதவி தேடி வந்தபோதும், அதனை வேண்டாம் என மறுத்தவர் ராகுல் காந்தி” என காங்கிரஸ் கட்சியன் மூத்த தலைவர் சக்திசின் கோஹில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "உடல்நலத்தை காரணம் காட்டி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது பிரதமர் பதவியிலிருந்து விலக மன்மோகன் சிங் விருப்பம் தெரிவித்தார். மேலும், ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.