தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, 'திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் மோடிக்கு ஜனநாயக ரீதியாக அறை கொடுக்க வேண்டும்' என கூறியிருந்தார்.
‘56 அங்குலம் மார்பளவு கொண்ட மோடியை நான் அறைய முடியுமா?’ - மம்தா நக்கல்
கொல்கத்தா: பிரதமர் மோடியை நான் கன்னத்தில் அறைவேன் என்று கூறவில்லை; ஜனநாயகத்தால் அறைவேன் என்று தான் கூறினேன் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விளக்கமளித்துள்ளார்.
மம்தா
இதற்கு பாஜகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், 'மம்தா பானர்ஜி என்னை அறைந்தாலும் அதை ஆசிர்வாதமாக ஏற்றுக்கொள்வேன்’ என பிரதமர் மோடி கூறினார்.
இந்நிலையில், பசிரிகாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, 'நான் ஏன் பிரதமரை அறையப்போகிறேன். அவரை அறைந்தால் எனது கை உடைந்துவிடும். 56 அங்குலம் மார்பளவு கொண்ட பிரதமர் மோடியை நான் எவ்வாறு அறைய முடியும்" என்று கூறியுள்ளார்.