தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜகவை வீழ்த்த ஓரணியாக திரள்வோம் -மம்தா பானர்ஜி

மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்க்க திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி

By

Published : Jun 27, 2019, 11:42 AM IST

அரசின் நலத்திட்டங்களை வழங்குவதற்காக பொதுமக்களிடம் இருந்து லஞ்சமாகப் பெற்ற பணத்தை அவர்களிடமே திருப்பித் தர வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு சில தினங்களுக்கு முன்பு மம்தா பானர்ஜி அதிரடியான உத்தரவை பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் வீட்டை முற்றுகையிட்டு கொடுத்த லஞ்ச பண்ததை திருப்பித் தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் வலுப்பெற்றதால் அக்கட்சியை சேர்ந்தவர்கள் மக்களின் பரிந்துரையை ஏற்று வாங்கிய லஞ்சத்தை திருப்பித் தருவோம் என கடிதம் மூலம் உறுதியளித்தனர். இந்நிலையில், இதுகுறித்து கூட்டப்பட்ட சட்டப்பேரவையில் மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கட்சியை ஒழுங்குப்படுத்துவது நமது தலையாய கடமை என்று தெரிவித்தார். இதன்பின்னர் பேசிய அவர், மேற்கு வங்கத்தில் மக்களின் நலனை சீர்குலைக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது. ஜெய் ஸ்ரீராம் என்று கூறி சமத்துவ இந்தியாவை இந்துமயமாக மாற்றப் பார்க்கிறது.

பாத்பாராவில் தொடரும் வன்முறைச் சம்பவங்களை வைத்து பாஜகவிற்கு வாக்களித்தால் என்ன நடக்கும் என்பது மக்களுக்கு இப்போது புரிய ஆரம்பித்திருக்கும். மக்களை அடிமைப்படுத்தும் பாஜகவிடம் இருந்து மக்களை மீட்க திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளும் ஓர் அணியில் இணைய வேண்டும். அரசியல் ரீதீயாக மூன்று கட்சிகளும் ஒன்றிணைவதில் பயன் ஏதும் இல்லை.

தேசிய அளவிலான பிரச்னைகளில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பாஜகவை எதிர்க்க பலமான கூட்டணி அமைப்பாக செயல்படுவோம் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details