மக்களவைத் தேர்தல் நாடு முழுவதிலும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வந்தது. காலை முதலே அனைத்து மாநிலங்களிலும் ஆதிக்கம் செலுத்திய பாஜக கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 24 தொகுதிகளில் முன்னிலை பெற்றது.
மல்லிகார்ஜூன் கார்கே தோல்வி
பெங்களூரு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தோல்வியைத் தழுவியுள்ளார்.
மஜத - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியில் களமிறங்கிய அனைவரும் பின்னடைவை சந்தித்தனர். இது தவிர மஜத தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவும் பின்னடைவை சந்தித்து தோல்வியைத் தழுவினர்.
இந்நிலையில், குல்பர்கா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அம்மாநிலத்தின் காங்கிரஸ் மூத்த தலைவரான மல்லிகார்ஜூன் கார்கே, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரான உமேஷ் ஜாதவை விட குறைவான வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார். ஆரம்பம் முதலே முன்னிலை பெறுவதும், பின்னர் பின்னடைவை சந்திப்பதுமாக இருந்து வந்த அவர் தற்போது தேல்வியைத் தழுவியுள்ளார்.