தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆரோக்கியமாக வாழ்வதற்கு காந்தி சொல்லும் அறிவுரை!

யோகா, உடற்பயிற்சி இந்த இரண்டும் ஆரோக்கியமான வாழ்விற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. காந்தி ஆரோக்கிய வாழ்விற்காக பின்பற்றியது, ஆரோக்கிய வாழ்விற்கான அறிவரை, இது தொடர்பாக பேராசிரியர் சல்லா கிருஷ்ணவீர் அபிஷேக் எழுதிய கட்டுரை இதோ....

Mahatma Gandhi

By

Published : Sep 11, 2019, 6:36 PM IST

காந்தியின் சத்யாகிரகத்தில் உடல் மற்றும் மனதின் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகித்ததில் எந்த சந்தேகமும் இல்லை. நீண்ட தூர நடைப்பயணத்தை மேற்கொண்டு சத்யாகிரகத்தை முன் நிறுத்தியவர் காந்தி. அவரது உணவுப்பழக்கம், உடல் ஆரோக்கியம், உடற்பயிற்சி இவற்றையெல்லாம் திறம்பட செய்ததால்தான் சத்யாகிரகத்தை மேற்கொள்ள முடிந்தது.

உணவில் கட்டுப்பாடோடு இருப்பதனால் ஆரோக்கியமாக இருப்பது என்னவோ நமது உடல் தான். ஆரோக்கியமற்ற உணவினால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்ந்து நோய் ஏற்படக்கூடும். யோகா, உடற்பயிற்சி இரண்டும் ஆரோக்கியமான உடலுக்கு சான்றாக நிற்கிறது. அதனை காந்தியடிகள் பின்பற்றியதாலேயே அயராது நடைப்பயணத்தை மேற்கொள்ள முடிந்தது.

மேலும் அவர், பூமி, நீர், காற்று, ஒளி உள்ளிட்ட கலவை தான் மனிதனுடைய உடல். அது மட்டுமல்லாது ஐந்து புலன்களும் அதில் உள்ளடங்கும், உதாரணத்திற்குச் சுவையை அறியக்கூடிய நாக்கு, முகர்தலை உணரக்கூடிய மூக்கு, பார்வை திறன் கொண்ட கண்கள், செவி சாய்க்கும் காது இவை அனைத்தும் உள்ளடக்கியதே மனிதனின் உடல்.

மகாத்மா காந்தி

காந்தி சைவ உணவை மட்டுமே எடுத்துக் கொள்வார். அதிலும் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், பயிர் வகைகள், பால் மற்றும் பாலில் தயாராகும் பொருட்கள் உள்ளிட்டவையே அவர் சேர்த்துக் கொள்ளும் உணவு வகைகள். டீ, காபி சிறிதளவே எடுத்துக் கொள்வார், அதிகம் உட்கொள்ள விரும்பமாட்டார். மது, மாதுவை அறவே தவிர்ப்பவர். பகுத்தறிவு திறன்கள், வழக்கமான வளர்சிதை மாற்றம், இதன் காரணத்தால் மதுவினை தவிர்க்கிறார் காந்தி.

ஆரோக்கியமான உணவே, ஆரோக்கியமான உடலுக்கான வளர்ச்சி என்று நம்புபவர் காந்தி. மனதைத் தனியாக விடாமல் அதற்கு ஏதோ ஒரு ஓட்டத்தை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறுபவர். சத்யாகிரகத்தையும், அகிம்சாவழியையும் பின்பற்றுபவர்களிடம் அவர் அடிக்கடி நினைவுகூர்வது அநாகரிக பேச்சுகளை தவிர்த்துவிடுங்கள் என்பதே.

காந்தி

மேலும், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு யோகா, உடற்பயிற்சி இவை இரண்டும் முக்கிய காரணமாக விளங்குகிறது என்று நம்புபவர். காந்தி அதனை நம்புவது மட்டுமல்லாமல் அதை பின்பற்றியும் வந்தவர். நோயற்ற வாழ்விற்கு ஆரோக்கியமான உணவு மிக முக்கியம் என்று எடுத்துரைப்பவர். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் மருந்துகள் எதனையும் எடுத்துக்கொள்ளாமல், தனது உணவுப்பழக்கத்திலேயே அதனை குணப்படுத்திக் கொள்பவர் காந்தி. உணவுப் பழக்கங்கள் ஆரோக்கியமானதாக இருந்தால் நோயற்ற வாழ்வில் இருந்து விடுபடலாம் என்பதே ஆரோக்கிய வாழ்விற்கு சிறந்த அறிவுரையாக காந்தி கூறுவதாகும்.

ABOUT THE AUTHOR

...view details