தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மஹாராஷ்டிராவில் சிறப்பு விமானங்களுக்கு மட்டுமே அனுமதி’

மும்பை: மஹாராஷ்டிராவில் சிறப்பு விமானங்களுக்கு மட்டுமே அனுமதி என்கிற உத்தரவில் எவ்வித மாற்றமும் இல்லை என அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக தெரிவித்தார்.

By

Published : May 24, 2020, 11:54 AM IST

முதலமைச்சர் உத்தவ் தாக்கரே
முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து நாட்டில் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இது பற்றி மஹாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, "மே 19ஆம் தேதி அறிவித்த ஊரடங்கு உத்தரவில் திருத்தம் செய்யவில்லை. நாளை முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டாலும், மாநிலத்திற்குள் சிறப்பு விமானங்களுக்கு மட்டுமே அனுமதி என்கிற உத்தரவில் எவ்வித மாற்றத்தையும் மஹாராஷ்டிரா கொண்டு வரவில்லை.

இந்தியாவில் அதிக அளவு கரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலம் மஹாராஷ்டிரா என்பதால், மும்பையில் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் பொது போக்குவரத்துக்கான தடை மே மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான நிலையங்கள் செயல்பட தொடங்கினாலும், பயணிகள் விமான நிலையங்களிலிருந்து தங்களது வீடுகளுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்படும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

"சிவப்பு மண்டலத்தில் விமான நிலையங்களை மீண்டும் திறப்பது மிகவும் தவறான ஆலோசனையாகும்" என்று மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க:இரண்டாயிரத்து 600 ரயில்கள் அடுத்த 10 நாட்களில் இயக்கப்படும் - ரயில்வே துறை

ABOUT THE AUTHOR

...view details