மகாராஷ்டிரா அரசின் 2020-21ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித் துறையை தன்வசம் வைத்துள்ள அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் அம்மாநில சட்டப்பேரவையில் தற்போது தாக்கல் செய்துவருகிறார்.
முன்னதாக, மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் உள்ளே அமைந்துள்ள சத்ரபதி சிவாஜி சிலையில் மாநில பட்ஜெட்டுடன் சென்று மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் அம்மாநில முதலமைச்சரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே உடனிருந்தார்.
2019ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சுமார் ஒரு மாதத்திற்கும் மேல் அங்கு நீடித்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்து சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தது.
இதையடுத்து, தாக்கல் செய்யப்படும் முதல் நிதிநிலை அறிக்கை என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடக்குமா? - அஞ்சும் தெலுங்கு தேசம்