தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லாலுவின் அரசியல் ஆட்டம் இனிதான் தொடங்கவுள்ளது!

பாட்னா : பிகாரில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான பிரம்மாண்ட கூட்டணி (மகாகத்பந்தன்) தீவிரமாக களமிறங்கியுள்ளது.

லாலுவின் அரசியல் ஆட்டம் இனி தான் தொடங்கவுள்ளது ?!
லாலுவின் அரசியல் ஆட்டம் இனி தான் தொடங்கவுள்ளது ?!

By

Published : Sep 9, 2020, 4:57 AM IST

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து, தேர்தலை எதிர்க்கொள்ள லாலு பிரசாத் யாதவ் கீழ் இயங்கிவரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான பிரம்மாண்ட கூட்டணி (மகாகத்பந்தன்) தீவிரமாக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

தேர்தலுக்கான இடங்களைப் பகிர்வதற்கான சூத்திரத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கிராண்ட் அலையனின் மூத்த தலைவர், பெயர் தெரியாத நிபந்தனைகள் குறித்து,

பாஜகவை வீழ்த்தும் ஒற்றை இலக்கை முன்வைத்து இரண்டு இடதுசாரி கட்சிகளையும் இந்த கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி முயன்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு இடதுசாரிகளும் இணைந்த இது பல இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க வைக்குமென பிரம்மாண்ட கூட்டணி நம்புகிறது.

ஆர்.ஜே.டி நிறுவன தலைவர் லாலு பிரசாத் யாதவின் இறுதி ஒப்புதலுக்காக திட்டங்கள் காத்திருப்பதால் மகாகத்பந்தனின் இருக்கை பகிர்வு குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பீகாரில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 130 -140 இடங்களில் ஆர்.ஜே.டியும், 55 -65 இடங்களில் காங்கிரஸ் கமிட்டியும் போட்டியிட வாய்ப்புள்ளது. எனினும், இடதுசாரிகளின் கூட்டணி உறுதிப்படுத்தல் இதனை மாற்றலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details