அஜய் தேவ்கன் நடிப்பில் 2011ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான படம் ’சிங்கம்’. இந்தப் படத்தில் போலீஸ் வேடத்தில் அஜய் தேவ்கன் நடித்திருப்பார்.
இந்தப் படத்தில் வரும் ஸ்டன்ட் காட்சியைப்போல் போலீஸ் உடையில் உதவி ஆய்வாளர் ஒருவர் இரண்டு கார்களுக்கு நடுவே நின்றுகொண்டு ஸ்டைலாக போஸ் கொடுப்பதுபோல வீடியோ ஒன்றை எடுத்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, உயர் காவல் அலுவலர்கள் அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
’சிங்கம்’ படத்தின் ஸ்டன்ட் செய்த ம.பி போலீஸ் இது குறித்து மத்தியப் பிரதேச காவல் துறையில் பணியாற்றும் காவல் அலுவலர் ஒருவர் கூறுகையில், ”உதவி ஆய்வாளர் மனோஜ் யாதவின் இந்தச் செயல் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமையக்கூடாது என்று அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க தாமர் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.
இந்த வீடியோ தொடர்பாக உதவி ஆய்வாளர் மனோஜ் யாதவ் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், ”வீடியோ மூன்று மாதங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டது. ’சிங்கம்’ படத்தில் வருவதைப்போல் என்னை நடிக்கும்படி எனக்கு என் நண்பர்கள் சவால் விட்டனர். சவாலை ஏற்றுக்கொண்டு அந்தத் தைரியமான ஸ்டன்ட்டை நான் செய்தேன்” என்றார்.
இதையும் படிங்க:மக்களிடம் மாட்டிய போலி போலீஸ்... வைரலாகும் வீடியோ...!