தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 26, 2020, 12:26 AM IST

ETV Bharat / bharat

புத்தகங்களைத் தானம் வழங்க புதிய செயலி 'PUSTAK'!

லூதியானா (பஞ்சாப்): நாடு தழுவிய ஊரடங்குக்கு மத்தியில் பல குழந்தைகள் உரிய புத்தகங்கள் இல்லாமல் சிரமப்படுவதால், பஞ்சாபின் லூதியானாவைச் சேர்ந்த பள்ளி மாணவி 'PUSTAK' என்ற செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த செயலியைப் பயன்படுத்தி, தேவை இல்லாத புத்தகங்களைத் தானம் தரவோ அல்லது தேவையான புத்தகங்களைத் தானம் பெறவோ முடியும்.

Ludhiana school student
Ludhiana school student

நாடு முழுவதும் ஊரடங்கு இருக்கும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேவையான புத்தகம் இல்லாமல், பல மாணவர்கள் கஷ்டப்படுவதால் பஞ்சாப் மாநிலம், லூதியானா பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவி பக்தி சர்மா, இந்த ஊரடங்கைப் பயன்படுத்தி, புத்தகம் இல்லாதவர்களுக்கு உதவும் வகையில், ஓர் புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

'PUSTAK' என்று பெயரிட்டுள்ள அந்த செயலியைப் பயன்படுத்தி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களும் தங்களது தேவை இல்லாத புத்தகங்களை மாணவர்களுக்குத் தானமாக வழங்கலாம் என பக்தி சர்மா தெரிவித்துள்ளார்.

மேலும் தன் தந்தையின் உதவியால் மட்டுமே இது சாத்தியமானது எனவும் நெகிழ்ச்சி படத் தெரிவிக்கிறார், பக்தி சர்மா.

இது தொடர்பாக பக்தி சர்மாவின் தந்தை கூறுகையில், 'இந்த செயலியை உருவாக்க என் மகளுக்கு வெறும் 12 நாட்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஒரு நாளைக்குத் தினமும் இரண்டு மணிநேரம் இந்த செயலியை உருவாக்கும் வேளையில் ஈடுபடுவார்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் தயாரிப்பு அதிகரிப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம்

ABOUT THE AUTHOR

...view details