தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி அருகே படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளி!

டெல்லி: குருகானில் பல்வேறு இடங்களில் வெட்டுக்கிளிகள் வானை மறைக்கும் அளவுக்கு படையெடுத்து வந்துள்ளன.

டெல்லி அருகே படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளி!
டெல்லி அருகே படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளி!

By

Published : Jun 27, 2020, 2:01 PM IST

பயிர்களை அழிக்கும் பாலைவன வெட்டுக்கிளிகளின் கூட்டம் தேசிய தலைநகரான டெல்லிக்கு அடுத்துள்ள ஹரியானா குருகிராமை அடைந்துள்ளது. குறிப்பாக சைபர் ஹப் பகுதிக்கு அருகே ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் வானத்தினை மறைத்து பறந்துசென்றன. இதனை அப்பகுதி மக்கள் படமெடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

இது குறித்து வேளாண் அமைச்சகத்தின் வெட்டுக்கிளிகள் எச்சரிக்கை அமைப்பு கூறுகையில், காலை 11.30 மணியளவில் குருகிராமில் வெட்டுக்கிளிகள் நுழைந்தன” என்றார்.

வெட்டுக்கிளிகள் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மக்கள், தங்களது வீட்டு சன்னல்கள், கதவுகளைப் பூட்டி வைக்கவும், பாத்திரங்களைக் கொண்டு ஒலியெழுப்பவும் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டியுள்ளது.

டெல்லி அருகே படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளி!

மே மாதத்தில் இந்தியாவிற்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள் முதலில் பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளைத் தாக்கின.

இதையும் படிங்க...‘கல்லூரி இறுதியாண்டுத் தேர்வை ரத்துசெய்ய வேண்டும்’- வலுக்கும் கோரிக்கைகள்

ABOUT THE AUTHOR

...view details