தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அச்சத்தில் கர்ப்பிணிகள்: கரோனா பரவலைத் தடுக்க சிறப்பு ஏற்பாடு

மும்பை: பிறந்த குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்வகையில், மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

mumbai
mumbai

By

Published : Apr 30, 2020, 2:50 PM IST

கரோனா தீநுண்மி நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்கியுள்ளது. இதனிடையே, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தனியார் மருத்துவமனைகள், சிகிச்சையகம் ஆகியவை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் தங்கள் குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ எனக் கர்ப்பிணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், பி.ஒய்.எல். மருத்துவமனையில் மும்பை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம், "தீநுண்மி பரவலைத் தடுக்கும் நோக்கில் தாயிடமிருந்து பிறந்த குழந்தை தனிமைப்படுத்தப்படுகிறது. தாய் பால் கொடுக்க சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன" எனத் தெரிவித்துள்ளது.

தற்போதுவரை, இந்த மருத்துவமனையில் கரோனா பாதிப்புடைய 52 கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 25 பேர் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தவீந்தர் சிங் வழக்கில் மேலும் ஒருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details