கரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்க முடியாததால், நடப்பு கல்வியாண்டுக்கான பாடங்களை ஆன்லைனில் நடத்தி வருகின்றனர்.
எல்கேஜி மாணவர்களுக்கு ஆசிரியரான ஆறு வயது சிறுமி!
திருவனந்தபுரம் : தனது தாய்க்கு பதிலாக எல்கேஜி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பை ஆறு வயது சிறுமி தத்ரூபமாக எடுத்த நிகழ்வு ட்ரெண்டாகி வருகிறது.
அந்த வகையில், கேரளாவில் எல்கேஜி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுத்து வந்த ஆசிரியர் ஒருவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில், தாயார் பாடம் எடுப்பதை கூர்ந்து கவனித்து வந்த அவரது ஆறு வயது சிறுமி தியா, தாயாரை போல் உடை அணிந்துக் கொண்டு எல்கேஜி மாணவர்களுக்கு கணிதப் பாடத்தை நடத்தியுள்ளார்.
குழந்தைகளுக்கு எளிதாக புரியும்படி வீட்டில் உள்ள தக்காளிகள், பீன்ஸ்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி எப்படி எண்ணுவது எனக் கற்றுக் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த சக ஆசிரியர்களும் பெற்றோர்களும் பயிற்சி பெற்ற ஆசிரியரைப் போல தியா தனது வகுப்புகளை நிர்வகிப்பதாகவும், தற்போதே ஆசிரியராக வளம் வருகிறார் எனவும் பாராட்டினர். தியாவின் இந்த க்யூட் காணொலி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.