தமிழ்நாடு

tamil nadu

சட்டக் கல்லூரி பருவத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை

By

Published : Aug 28, 2020, 4:55 PM IST

புதுச்சேரி: சட்டக் கல்லூரி பருவத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்கள் கோரிக்கை
மாணவர்கள் கோரிக்கை

புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பருவத் தேர்வு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், அறிவிக்கப்பட்ட தேர்வை ரத்து செய்யக்கோரி சட்டக் கல்லூரி மாணவர்கள் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், காரைக்கால் ஆட்சியர் அர்ஜுன் சர்மாவிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த மாணவர்கள், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் பருவத் தேர்வு தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பேரிடர் சூழல் காரணமாக மார்ச் 14ஆம் தேதி மாணவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. இதனால் கல்லூரி நூலகத்தை பயன்படுத்த முடியவில்லை, கல்வி தேவைக்கான எந்தவொரு தரவுகளையும் பெற இயலவில்லை. ஆன் லைன் வகுப்புகளில் இந்த பருவத்துக்கான பாடத்திட்டம் முழுமையும் முடிக்கப்படவில்லை.

புதுச்சேரி, காரைக்காலில் கரோனா தொற்று அதிகரித்து வருவதோடு, உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. பொது போக்குவரத்தும் இல்லை. இந்நிலையில், விடுதியில் தங்கி படிக்கும் நாங்கள் கல்லூரிக்கு சென்று தேர்வு எழுதுவது கடினம். மேலும் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதையும், கரோனா பேரிடர் சூழலை கருத்தில் கொண்டு தேர்வு நடைமுறைகள் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு சில வழிகாட்டு முறைகளை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் தேர்வை ரத்து செய்யவோ, தள்ளி வைக்கவோ தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறினர்.

ABOUT THE AUTHOR

...view details