தமிழ்நாடு

tamil nadu

பொருளாதார நெருக்கடியால் இளைஞர் தற்கொலை!

லக்னோ: ஊரடங்கால் வேலையிழந்து சொந்த ஊருக்குத் திரும்பிய இளைஞர் ஒருவர், பொருளாதார நெருக்கடியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

By

Published : Jun 18, 2020, 3:52 PM IST

Published : Jun 18, 2020, 3:52 PM IST

labourer-commits-suicide-due-to-financial-woes-in-up
labourer-commits-suicide-due-to-financial-woes-in-up

உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டம் பிஸாந்தா பகுதியைச் சேர்ந்தவர் அகிலேஷ் சிங்(25). மகாராஷ்டிரா மாநிலத்தில் பணியாற்றி வந்த இவர், கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக வேலையிழந்து, சொந்த ஊருக்கு திரும்பினார்.

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சொந்த ஊருக்குத் திரும்பிய இவர், 14 நாள்கள் சுய தனிமைப்படுத்தலை முடித்துக்கொண்டு, வேறு வேலை தேட தொடங்கினார். இருப்பினும், எந்த வேலையும் கிடைக்காததால் உணவுக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டது. மேலும், பல்வேறு பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்தார்.

பின்னர், செய்வதறியாது தவித்த அகிலேஷ் நேற்று (ஜூன் 17) மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பிஸாந்தா பகுதி காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details