ஹிமாச்சல பிரதேசம் குல்லு மாவட்டத்தின் பஞ்ஜார் பகுதியிலுள்ள ஃபாகு புல் (Fagu Pul) என்ற இடத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த பிக்கப் டிரக் வாகனத்தை காவல்துறையினர் சோதனை செய்ததில், ரூ. 53 லட்சம் மதிப்புள்ள 42.2 கிலோ போதை பொருளை மறைத்துவைத்திருந்தது கண்பிடிக்கப்பட்டது.
இதையடுத்து போதை பொருள் டிரக்கை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் மண்டி மாவட்டம் ரேவல்சரைச் சேர்ந்த லீலதர் எனத் தெரியவந்தது.
இதுதொடர்பாக குல்லு காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில், 'லீலதர் மீது போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளில் அதிகளவில் கடத்தப்பட்ட போதை பொருள் இதுவாகும். குல்லு மாவட்டத்தில் ஜூலை 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 218 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குல்லு பள்ளத்தாக்கு உயர்தர போதை பொருள் பயிரிடுவதில் பெயர் பெற்றது. மேலும் சர்வதேச சந்தையில் போதைப் பொருட்களுக்கு நல்ல விலை இருப்பதால், அத்தைகைய பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன' என்றார்.
இதையும் படிங்க:வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 4 பேர் கைது!