கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 30 மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் பாகிஸ்தான் நாட்டுக்கொடியை ஏற்றியுள்ளனர். அவர்கள் அனைவரும் இஸ்லாம் மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளனர்.
கேரள மாணவர்கள் ஏற்றிய பாகிஸ்தான் கொடி?!
கோழிக்கோடு மாவட்டத்தில் 30 மாணவர்கள் பாகிஸ்தான் நாட்டுக் கொடியை கல்லூரி வளாகத்திற்குள் ஏற்றியதால், அவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பின்னர், தகவலறிந்து வந்த காவல்துறையினர் கல்லூரி மாணவர்கள் 30 பேர் மீதும் ஐபிசி பிரிவு 143, 147, 153, 149 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இஸ்லாம் மாணவர்கள் இயக்க கொடியைத் தான் கல்லூரி வளாகத்திற்குள் ஏற்றியதாகவும், கொடியின் அளவு பெரியதாக இருந்ததால் பாகிஸ்தான் நாட்டு கொடியைப் போல் தோற்றமளித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணையை காவல்துறையினர் நடத்தி வருகின்றனர்.