கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட தேர்வு பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற்றது. இதில், முறைகேடு நடந்திருப்பதாக மாணவர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தயார் செய்யப்பட்ட தேர்வின் கேள்வித்தாள்களை அம்மாநில தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் கோச்சிங் சென்டரில் பயிலும் மாணவர்களுக்கு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த விசாரணையை ஊழல் தடுப்புப் பிரிவு விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
கேபிஎஸ்சி தேர்வில் முறைகேடு: விசாரணையைத் தொடங்கிய ஊழல் தடுப்புப் பிரிவு!
திருவனந்தபுரம்: கேபிஎஸ்சி தேர்வு கேள்வித்தாள்களைத் தயார் செய்து கோச்சிங் சென்டரில் பயிலும் மாணவர்களுக்கு கொடுத்ததாகப் புகார் எழுந்த நிலையில், இதுகுறித்த விசாரணையை ஊழல் தடுப்புப் பிரிவு விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
KPSC
அரசு அலுவலர்களால் இந்த கோச்சிங் சென்டர்கள் நடத்தப்படுகிறதா என்பது குறித்து, ஊழல் தடுப்புப் பிரிவு விசாரித்து வருகிறது. கோச்சிங் சென்டர்களால் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்களில் கேள்வித்தாள்கள் பகிரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆவணம், கோப்புகளை எச்சில் தொட்டு திறக்க வேண்டாம் - உயர் அலுவலர் உத்தரவு