தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவில் மதுக்கடைகள், பீர் பார்லர்கள் திறக்க அனுமதி!

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பார்கள், ஒயின், பீர் பார்லர்கள் உள்ளிட்டவற்றை திறக்க கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

By

Published : Dec 22, 2020, 1:58 PM IST

கேரளாவில் மதுக்கடைகள்,  பீர் பார்லர்கள் திறக்க அனுமதி!
கேரளாவில் மதுக்கடைகள், பீர் பார்லர்கள் திறக்க அனுமதி!

திருவனந்தபுரம்: கேரளாவில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மதுக்கடைகள், மது, பீர் பார்லர்கள் உள்ளிட்டவற்றை மீண்டும் திறக்க அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை, பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

கேரளாவில், நேற்று (டிச.21) புதியதாக மூன்றாயிரத்து 423 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் 27 பேர் நேற்று உயிரிழந்தனர். இதன்மூலம் கேரளாவில் கரேனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 843 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்து 504 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில், கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மதுக்கடைகள், மது, பீர் பார்லர்கள் உள்ளிட்டவற்றை மீண்டும் திறக்க கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி வெளிநாட்டு மதுபான விதிகளில் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்கவும், அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடித்தும் கேரளாவில் பார்கள், கிளப்புகள், பீர் / ஒயின் பார்லர்கள், விமான நிலைய சொகுசு பார்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details