தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிபிஐ வசம் சென்றது இசையமைப்பாளர் பாலபாஸ்கர் வழக்கு!

மலையாள வயலின் இசைக் கலைஞரும், இசையமைப்பாளருமான பாலபாஸ்கர், 2018 செப்டம்பர் 25ஆம் தேதி கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து, வழக்கானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Balabhaskar case
Balabhaskar case

By

Published : Jul 30, 2020, 3:13 PM IST

Updated : Jul 30, 2020, 6:54 PM IST

திருவனந்தபுரம்: கேரள அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய புலனாய்வு அமைப்பினர் (சிபிஐ) இசையமைப்பாளர் பாலபாஸ்கர் மரணம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்திய தண்டனைச் சட்டம் 279, 337, 338, 304ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூம் 12ஆம் தேதி இவ்வழக்கை சிபிஐ விசாரிக்கும் என மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. மரணமடைந்த பாலபாஸ்கரின் தந்தை, தன் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் பதிவு செய்ததை அடுத்து மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது.

’பணம் தரல உன்னை கொன்றுவேன்’ - மருந்து கடை உரிமையாளரை மிரட்டும் ரவுடி

மலையாள வயலின் இசைக் கலைஞரும், இசையமைப்பாளருமான பாலபாஸ்கர், 2018 செப்டம்பர் 25ஆம் தேதி பெரும் காயங்களுடன் கார் விபத்தில் சிக்கிக்கொண்டார்.

40 வயதான அவருக்கு மூளையின் நரம்புகளிலும், முதுகுத் தண்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது, பள்ளிபுரம் எனும் இடத்தில், சாலையில் அருகிலிருந்த மரத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திரிச்சூரிலுள்ள கோயிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்துவிட்டு திருவனந்தபுரம் திரும்பிசென்றுகொண்டிருந்த நேரத்தில் இவ்விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் பாலபாஸ்கரின் இரண்டு வயது மகளான தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்த நிலையில், மனைவி லட்சுமியும், ஓட்டுநர் அர்ஜுணும் காயமுற்றனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ கைது!

தென்னிந்தியாவில் இணைவு இசையை ஊக்குவிப்பதில் மிகவும் பிரபலமான பாலபாஸ்கர், வயலின் வாசிப்பதில் தன் குழந்தை பருவத்திலிருந்து சிறந்து விளங்கியவர். மேலும் 17ஆவது வயதில் 'மங்கல்யா பல்லக்கின்' எனும் தனது முதல் திரைப்படத்திற்கு இளம் வயதில் இசைமைத்து பெருமைதேடியவர்.

கே.ஜே.யேசுதாஸ், ஹரிஹரன், சுரேஷ் வாட்கர், கே.எஸ். சித்ரா, சுஜாதா, ஸ்ரீனிவாஸ், கார்த்திக் மற்றும் சில புகழ்பெற்ற பாடகர்களுடன் பாலபாஸ்கர் பணியாற்றியுள்ளார்.

Last Updated : Jul 30, 2020, 6:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details