தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கடும் பனிப்பொழிவு - பாதிப்புக்குள்ளான கேதார்நாத் கோயில்

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இமயமலைப்பகுதியில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாகப் புகழ்பெற்ற கேதார்நாத் ஆலயம் பதிப்புக்குள்ளாகியுள்ளது.

kedarnath

By

Published : Apr 13, 2019, 8:48 AM IST

பிரசித்திபெற்ற சிவாலயங்களில் ஒன்றான கேதார்நாத் ஆலயம், உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரப்பிரயாக் மாவட்டத்தில் உள்ள இமயமலைப் பகுதியில் நிலப்பரப்பிலிருந்து 11 ஆயிரத்து 755 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சிவனின் 12 ஜோதிலிங்க தளங்களில் ஒன்றான இக்கோயில் கடந்த 2013ஆம் ஆண்டு பெரும் வெள்ள பாதிப்புக்குள்ளானது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் இயற்கை பேரிடாரன இந்த வெள்ளத்தில் சேதமடைந்த கோயிலில் முழுமையான சீரமைப்பு பணி கிட்டத்தட்ட ஒருவருட காலம் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வருடம் இமயமலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக கேதார்நாத் ஆலயம் பதிப்புக்குள்ளாகியுள்ளது. சுமார் 7 அடி உயரத்துக்குப் பனியால் கோயில் மூடப்பட்டுள்ளதாகவும், கோயிலின் மேற்தளங்கள், சுற்றுப்பிரகாரங்களில் பனிப்பொழிவால் பதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பாதிப்புக்குள்ளான வழித்தடம்

வரும் 15ஆம் தேதி பக்தர்களுக்காக கோயில் திறக்கப்படவிருந்த நிலையில், கோயில் தரப்பு நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்டு கோயிலை புனரமைக்கும் பணியைத் தீவிரமாகக் மேற்கொண்டு வருகின்றனர்.

சீரமைப்புப் பணியில் தொழிளாலர்கள்

ABOUT THE AUTHOR

...view details