தமிழ்நாடு

tamil nadu

வெள்ளப்பெருக்கில் சிக்கிய ஆடுகளுடன், ஆடு மேய்ப்பவர்: மீட்புப் பணி தீவிரம்!

பெங்களூரு: யாதகிரி மாவட்டத்தில் ஆடு மேய்க்கச் சென்ற நபர், ஆடுகளுடன் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டதால், அவர்களை மீட்க மாவட்ட அலுவலர்கள் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

By

Published : Aug 10, 2020, 1:20 AM IST

Published : Aug 10, 2020, 1:20 AM IST

sheep
sheep

தென் மேற்குப் பருவ மழையால் கர்நாடக மாநிலத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்துவருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் யாதகிரி மாவட்டம், ஹுனாசகி அருகே உள்ள நாராயணப்பூர் கிராமத்தில் கனமழையால் கிருஷ்ணா ஆறு நிரம்பி, வெளியேறி வெள்ளநீர் சூழ்ந்தது. இந்நிலையில் அப்பகுதியில் ஆடுகளை வைத்து மேய்த்துக் கொண்டிருந்த, பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த தோப்பண்ணா என்பவர், ஆடுகளுடன் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு அங்கு சிக்கிக் கொண்டார்.

வெள்ளப் பெருக்கில் சிக்கிய ஆடுகளுடன், ஆடு மேய்ப்பவர்: மீட்புப் பணி தீவிரம்!

இதுகுறித்து தகவல் அறிந்த ஹுனாசகி வட்டாட்சியர் அப்பகுதிக்கு விரைந்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர்களை மீட்க தேசியப் பேரிடர் மீட்புப் படையினர், அவ்விடம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க:கர்நாடக வெள்ளம்: கைக்குழந்தை உட்பட 6 பேர் மீட்பு

ABOUT THE AUTHOR

...view details