பாகிஸ்தான் சார்பு கோஷங்கள் அடங்கிய காணொலிக் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது. புல்வாமா தாக்குதல் நினைவு தினத்தில் வெளியான அந்த காணொலியில், பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களுடன் நாட்டுக்கு எதிரான பேச்சுகளும் இருந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து காவலர்கள் விசாரணை நடத்தி காணொலி பதிவேற்றிய மூன்று மாணவர்களை கைதுசெய்தனர். அவர்கள் மூவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கர்நாடக மாநிலம் உப்பள்ளியில் உள்ள கல்லூரியில் பொறியியல் பயின்றுவருகின்றனர்.
இதனால் அவர்களை காவலர்கள் எச்சரித்து அனுப்பினர். இதற்கு சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அந்த மாணவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து மாணவர்கள் மூன்று பேரும் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் நீதிமன்ற பிணைக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மாணவர்கள் மூன்று பேருக்கும் பிணை வழங்க மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க:பாஜக கூடாரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்