மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபலுடன் மூத்த பத்திரிகையாளர் அமித் அக்னி ஹோத்ரி எடுத்த நேர்காணல்.....
பல மாநில அரசுகள் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது. இந்தத் தீர்மானங்கள் சட்ட ரீதியாக செல்லுபடியாகுமா?
நன்று. இந்த விவகாரமானது உச்ச நீதிமன்றத்தின் முன் நிலுவையில் இருப்பதால், நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும். நீதிமன்றமானது, இந்தச் சட்டத்தினை தூக்கிப் பிடித்தால், இந்தத் தீர்மானங்களை நடமுறைப்படுத்தும் விஷயம் மேல் எழும்.
இந்தத் தீர்மானங்கள் சொல்லுவது என்னவெனில், இந்திய அரசாங்கமானது மறுசிந்தனை செய்து அந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தினைத் திரும்பப் பெறவேண்டும் என்பதேயாகும். அந்தத் தீர்மானங்கள் கச்சிதமாக செல்லுபடியாகும். எனினும், மற்ற எந்த வழக்குத் தீர்ப்பினைப் போலவே, இந்த விவகாரமும் உச்சநீதிமன்றத்தின் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்தே இருக்கும்.
இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டமானது காங்கிரஸ்ஸின் கவனத்தினை சறுக்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லுகிறதா?
இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டமானது சறுக்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்திலிருந்து கவனத்தை வெளியே கொண்டு செல்லவில்லை என்றே கருதுகிறேன். அதுவே இன்று மக்களை எதிர்கொண்டிருக்கும் உண்மையான பிரச்சனை ஆகும். மக்கள் இன்று தெருக்களுக்கு வருவதற்கான காரணங்களில் ஒரு பகுதியாக இருப்பது என்னவென்றால், அவர்களில் அநேகருக்கு வேலையின்மையும், மற்றும் அநேகர் எதிர்காலத்தைப் பற்றி கொண்டிருக்கும் கவலையுமே அகும்.
அதற்கும் மேலாக எழும்பும் பிரச்சனை என்னவென்றால், தேசிய மக்கள் தொகை பதிவேடு தற்போது நடக்கும்போது, கணக்காய்வாளர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் வந்து 2010இல் முடிவுசெய்யப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் மேலாக வினாக்களை எழுப்புதலே ஆகும். எனவே, இப்போது குடியுரிமையைப் பொறுத்த வரையில் அவர்களின் தலைவிதியானது தங்களது வீட்டிற்கு கணக்கெடுக்க வரும் ஒவ்வொரு நபரின் கையில்தான் இருக்கிறது என்று மக்கள் கவலைப்படுகிறார்கள்.
மேலும், அவர்களருடைய பெயருக்கு எதிராக அந்த நபர் "டி" என்ற குறியினை இடும் பட்சத்தில் அவர்கள் குடியுரிமை சந்தேகத்திற்குள்ளானது என்று பொருளாகிறது. சாதாரணமாக, ஒரு தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்குத் தேவையானதெல்லாம் கடந்த ஆறு மாதங்களில் உங்களுடைய குடியிருப்பு விரங்கள் மட்டுமே ஆகும்.
ஆனால், இப்போது எழுப்பப்படும் கூடுதலான கேள்விகளானது என்ன விளைவுகளை உண்டாக்கும் என்று மக்கள் கவலைப்படுகிறார்கள். வடகிழக்குப் பகுதிகளில் ஏற்கனவே நிகழ்ந்துள்ளதைப் போன்று இது அநேக பிரச்சனைகளை உண்டாக்கியிருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.
அஸ்ஸாம் என்.ஆர்.சி-இல் அங்கம் வகிக்காத 19 இலட்சம் மக்களில், 12 இலட்சத்திற்கு மேல் இந்துக்கள். அந்த வகையில் ஒரு பகுதியினராக முஸ்லீம்கள் மட்டுமே இருந்திருப்பார்கள் என்று மத்திய அரசு நினைத்தது.
சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் என்பது, அரசாங்கம் உரிமை கோருகின்றபடி சிறுபான்மையினரால் இயக்கப்படும் போராட்டங்களா?
அஸ்ஸாம் என்.ஆர்.சியில் 12 இலட்சம் இந்துக்கள் சம்பந்தப்பட்டிருக்கும் பட்சத்தில் எப்படி இது சிறுபான்மையினரால் இயக்கப்படுவதாகும்? அஸ்ஸாமில் ரூ.1600 கோடி செலவில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டாலும், மேலும் ரூ. 30,000 கோடி தேசிய அளவு இந்தப் பரிசோதனைக்காக செலவழிக்ப்பட்டாலும், சிறுபான்மையினரல்லாதோராக இலட்சோபலட்சம் மக்கள் இருக்கலாம் அல்லது அவர்கள் காங்கிரஸூக்கோ அல்லது மற்ற எதிர் கட்சியினருக்கோ வாக்களிக்கும் மக்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய பெயருக்கு எதிரே "டி" என்ற குறியீடு இடப்பட்டிருக்கலாம். இது பிளவுபடுத்தக் கூடியதொரு திட்டமாக இருக்க முடியும்.
டெல்லி வகுப்புவாத வன்முறைகளுக்கு முன்பு, வெறுப்புகளைத் தூண்டும் உரைகளைச் செய்துவிட்டு சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்ற பாஜக மூத்தத் தலைவர்களுக்கு எதிராக நீங்கள் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளீர்கள். உங்கள் கருத்துக்கள்?
இது குறிவைக்கப்பட்ட வன்முறையாகும். டெல்லி காவல்துறையானது கண்டும் காணாததுபோல் இருந்திருப்பதும், பல சமயங்களில் அவர்கள் கண்களுக்கு எதிரேயே வன்முறை நடந்திருப்பதும் துரதிஷ்டவசமானது. பல நிகழ்வுகளில், காயப்பட்டு கீழே கிடக்கும் மக்களை அடித்து அவர்களை "ஜன கன மன" பாடச் சொல்லிக் கேட்பதைக் காட்சியாக நான் பார்த்திருக்கிறேன்.
அந்த வெறியர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாதிருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. பிஜேபி தலைவர்கள் வெறுப்பு உரைகளைச் செய்வதும், ஆனால், அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையினையும் எதிர்கொள்ளாதிருப்பதும் ஒரு தீவிரமான பிரச்சனை என்று நான் நினைக்கின்றேன்.
நிர்வாகமானது எந்த ஒரு நடவடிக்கையினையும் எடுக்கப்போவதில்லை என்பதைத் தவிர்த்து, நீதிமன்றமானது அமர்ந்து இதை குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். இது முளையிலேயே கிள்ளி எறியப்படாவிட்டால் இது கொரோனா வைரஸைப்போல இனவாத வைரஸாக பரவிவிடும். நான்கு வாரங்களாக ஒத்திவைத்துக் கொண்டேபோன இந்த விசாரணையை வெள்ளிக்கிழைமை பட்டியலில் எடுத்துக்கொண்டு நீதிமன்றம் சரி என்று நினைக்கிறதை செய்ய இந்திய தலைமை நீதிபதி வழிகாட்டி உள்ளதைக் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இப்படிப்பட்ட வெறுப்பு உரைகளைக் கொடுக்கிறவர்கள் யாராக இருந்தாலும் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 153-ஏ இன் கீழ் தண்டிக்கப்படக் கூடியவர்களாவார்கள். இன்னும் போலீஸ் ஏன் முதல் குற்ற அறிக்கையினை தாக்கல் செய்யவில்லை? சுவரஸ்யமாக, 69 மணிநேரம் கழித்து விழித்துக்கொண்டுள்ள பிரதம மந்திரி சமாதான முறையீடுகளை எழப்பியுள்ளார்.
இந்த முழு படலத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பங்கு என்னவென்று பார்க்கிறீர்கள்?
ஆம் ஆத்மி கட்சியினைப் பொறுத்தவரை, அது ஒரு சீரான நிலையான நடத்தைகளை உடையதாக இருப்பதை நான் கண்கூடாகக் காணமுடிகிறது. ஜேஎன்யூ வன்முறை நடந்தபோது அவர்கள் அந்தச் செயல்-சார்ந்த முன் நடவடிக்கை எடுக்காமலும், ஜாமியா பல்கலைக்கழகம் வன்முறை நடந்தபோது அவர்கள் தங்களை ஒரு தூரத்திலும் நிறுத்திக்கொண்டனர்.