கன்னட தொலைக்காட்சி நடிகர் சுஷில் கவுடா, மாண்டியாவிலுள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 36. சுஷில் அவரது பெற்றோருக்கு ஒரே மகன் ஆவார்.
இந்நிலையில் அவரை காணவில்லை என அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் அவர் திங்கள்கிழமை (ஜூலை6) தற்கொலை செய்துகொண்டதாக காவலர்கள் புதன்கிழமை (ஜூலை8) அறிவித்துள்ளனர்.
தற்கொலை செய்துகொண்ட சுஷில் கவுடா இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சுஷில் குமாரின் தற்கொலை கன்னட தொலைக்காட்சி திரைநட்சத்திரங்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுஷில் 2015ஆம் ஆண்டு முதல் கன்னட தொலைக்காட்சிகளில் நடித்துவந்தார். இவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.
இதையும் படிங்க: சுஷாந்த் தற்கொலை: பிரபலங்கள் மீதான வழக்கு தள்ளுபடி