தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காலேஸ்வரம் திட்டம்: ஆந்திர முதலமைச்சருக்கு அழைப்பு

அமராவதி: காலேஸ்வரம் நீர்ப் பாசனத் திட்டத்தின் திறப்பு விழாவுக்கு வருமாறு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

jagan

By

Published : Jun 18, 2019, 11:20 AM IST

தெலங்கானாவில் விவசாய நீர்த் தேவைகளை பூர்த்திசெய்யும் நோக்கில், அம்மாநில அரசு காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தயாராகிவரும் இந்தத்திட்டத்தால் 13 மாவட்டங்களில் உள்ள 18 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறவுள்ளன.

இத்திட்டத்தின் திறப்புவிழா வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த திறப்பு விழாவுக்கு வருகை தருமாறு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அழைப்பு விடுத்தார்.

இதற்காக, நேற்று ஆந்திரமாநிலம் விஜயவாடா சென்ற சந்திரசேகர ராவ், ஜெகன்மோகன் ரெட்டியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அப்போது, ஆந்திரா-தெலங்கானா இடையேயான பல்வேறு பிரச்னைகள் குறித்து இருமாநில தலைவர்களும் ஆலோசித்தனர்.

காலேஸ்வரம் திட்ட திறப்பு விழாவுக்கு, மாஹாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details