தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'நக்சலில் போய் சேருங்க' - அந்திர அமைச்சரின் பேச்சால் எழுந்த சர்ச்சை!

அமராவதி: ஆந்திராவில் தலித் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் தலையிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக ஆந்திர அமைச்சரின் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

AP
AP

By

Published : Aug 13, 2020, 10:14 PM IST

ஆந்திராவில் சீதாநகரம் பகுதியைச் சேர்ந்த வரா பிரசாத் என்ற இளைஞர் அன்மையில் தாக்கப்பட்டது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அங்கு ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் மணல் கடத்தில் ஈடுபட்டதை அவர் தட்டிக்கேட்டுள்ளார். இதையடுத்து, சிலர் அவரை கடுமையாகத் தாக்கி மொட்டையடித்து துன்புறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு விசாரணைக்காக சிறப்பு அலுவலர் ஒருவரை நியமித்துள்ளார். இந்த முன்னகர்வுகள் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், அம்மாநில சமூக நலத்துறை அமைச்சர் பினிபி ஸ்வரூப் இன்று (ஆகஸ்ட் 13) சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் வேண்டுமென்றால் நக்சல் குழுவில் சேர்ந்து கொள்ளலாம். அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் ஒன்றும் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார். ஆத்திரத்தின் காரணமாக அமைச்சர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க:அலுவல் மொழி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் - உச்ச நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details