சீனாவில் தோன்றி உலகையே மிரட்டி வரும் கொரோனா தொற்று, தற்போது இந்தியாவில் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. முன்னதாக, டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் பலர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, கொரோனா பரவாமலிருக்க, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவும், அங்கிருந்து இந்தியா வரவும் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டவர்கள் 159 பேர் மருத்துவ முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்றோடு 28 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை அரசு உறுதி செய்துள்ளது. இந்தச் செய்தி அம்மாநில மக்களிடையே பீதியை கிளப்பியது.
இதையும் படிங்க:'டெல்லி கலவரம் குறித்து நியாயமான விசாரணை வேண்டும்' - ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்