தமிழ்நாடு

tamil nadu

கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த அலுவலகத்தை வழங்கும் ஜாமியா உலமா இ ஹிந்த் அமைப்பு!

By

Published : Mar 31, 2020, 12:12 AM IST

டெல்லி: கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த ஜாமியா உலமா இ ஹிந்த் அமைப்பு தனது அலுவலகங்களை வழங்க முன்வந்துள்ளது. இதில் பத்து ஆயிரம் கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த முடியும்.

Jamiat Ulema e Hind  Maulana Mahmood Madani  Quarantine Centres  Muslim Body  Prime Minister  Narendra Modi  Letter  COVID 19  Pandemic  Outbreak  Novel Coronavirus  கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த அலுவலகத்தை வழங்கும் ஜாமியா உலமா இ ஹிந்த் அமைப்பு  கரோனா நோயாளிகள் தனிமைப்படுத்துதல்  ஜாமியா உலமா இ ஹிந்த் அமைப்பு
Jamiat Ulema e Hind Maulana Mahmood Madani Quarantine Centres Muslim Body Prime Minister Narendra Modi Letter COVID 19 Pandemic Outbreak Novel Coronavirus கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த அலுவலகத்தை வழங்கும் ஜாமியா உலமா இ ஹிந்த் அமைப்பு கரோனா நோயாளிகள் தனிமைப்படுத்துதல் ஜாமியா உலமா இ ஹிந்த் அமைப்பு

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜாமியா உலமா இ ஹிந்த் அமைப்பின் பொதுச்செயலாளர் மௌலானா மக்மூத் மதானி எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதானி தனது கடிதத்தில், “தங்களது அமைப்பில் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். எங்களது அமைப்பு நாடு தழுவிய மாநிலம், மாவட்டம் அளவிலான வலையமைப்பு கொண்டது.

எங்களது அமைப்புக்கு சொந்தமாக கட்டடங்கள் உள்ளது. இதில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கலாம்.

கரோனாவை வெல்வதற்கான தங்களின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிக்கு எங்கள் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

மேலும் மதானி தனது கடிதத்தில், “உள்நாட்டில் தொண்டர்கள் மூலம் தேவைப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க எங்கள் அனைத்து மாநில மற்றும் மாவட்ட பிரிவுகளையும் நாங்கள் செயல்படுத்தியுள்ளோம்.

வளர்ந்து வரும் சூழ்நிலை காரணமாக, கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஏராளமான மக்களை தனிமைப்படுத்த வேண்டும் என்பது எங்கள் அறிவுக்கு வந்துள்ளது.

எங்களது அமைப்பின் கட்டுப்பாட்டிலிலுள்ள கட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்க முடியும்” எனவும் கூறியுள்ளார்.

உலகம் முழுக்க கரோனா பாதிப்புக்கு ஏழு லட்சத்துக்கு 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 52 பேர் குணமடைந்துள்ளனர். இறப்பு 34 ஆயிரத்து 41 ஆக உள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றுக்கு இதுவரை 1077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: கோவிட்-19: 100 கோடி ரூபாய் அளித்த இன்போசிஸ் பவுண்டேசன்

ABOUT THE AUTHOR

...view details