தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு: தெருவெங்கும் தேசியக்கொடியை தூக்கிப் பேரணி

புதுச்சேரி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.

புதுச்சேரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பேரணி
புதுச்சேரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பேரணி

By

Published : Jan 21, 2020, 7:11 PM IST

புதுச்சேரியில் அனைத்து இஸ்லாமிய கட்சிகளையும் இயக்கங்களையும் ஒன்றிணைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாகக் கண்டன பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியானது குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடைபெற்றது.

புதுச்சேரி சுதேசி மில் அருகில் தொடங்கிய இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக தலைமை அஞ்சல் நிலையம் அருகே நிறைவடைந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தேசியக் கொடியை ஏந்தி குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தினர்.

புதுச்சேரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் பேரணி

இதில் ஜமாஅத்துல் உலமா சபையின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் மௌலி அப்துல் மாலிக் கலந்துகொண்டு பேசினார். மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கருத்தியல் பரப்பு மாநிலச் செயலாளர் சந்தர், மீனவர் விடுதலை வேங்கைகள் கட்சியின் தலைவர் மங்கையர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.


இதையும் படிங்க:

வேலம்மாள் குழுமத்தில் அதிரடி சோதனை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details