ஆந்திர மாநிலம் பெனுமுரு கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும் மருத்துவர் அன்கிதா ராணி. இவர் கடந்த வாரம் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
அந்த மனுவில், "கடந்த மார்ச் 22ஆம் தேதி நான் விடுதியில் இருந்தபோது அங்கு வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சிலர் என்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினர்.
நான் கழிவறைக்குச் செல்லும்போது என்னைப் படம் பிடித்தனர். இது குறித்து காணொலி ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து என்னை மிரட்டிவருகின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகார் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண் மருத்துவரின் புகார் குறித்து விசாரணை நடத்துமாறு சிஐடிக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சித்த பெண் ஊழியர் பணியிடை நீக்கம்!