கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியாவில் இதுவரை 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 16 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் இப்பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் மக்கள் பொதுவெளியில் நடமாட வேண்டாமென அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய் துறை அமைச்சர் ஷாஜகான், ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. எனவே சமுதாயத்திற்கும், அரசாங்கத்திற்கும் பொதுமக்கள் வீட்டில் இருப்பதுதான் நல்லது.