தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அசுர வேகம் கொண்ட ப்ளூ மர்லின் மீனை பிடித்த கர்நாடக மீனவர்!

பெங்களூரு: கடலில் அசுர வேகத்தில் நீந்தும் ப்ளூ மர்லின் மீனை கர்நாடக மீனவர் பிடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

By

Published : Oct 5, 2020, 6:03 PM IST

ishee
iahee

கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் காபிதகேனியா பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், கடலில் மீன் பிடிக்கும் சமயத்தில் அரிய வகை மீன் ஒன்று சிக்கியுள்ளது. அதைப் பிடித்து ஆய்வு செய்ததில், கடலில் அசுர வேகத்தில் நீந்தும் தன்மைகொண்ட இந்தோ-பசிபிக் ப்ளூ மர்லின் எனத் தெரியவந்துள்ளது.

கூர்மையான முகமும் பின்புறத்தில் சிறகுகளும் கொண்ட ப்ளூ மர்லினி மீனின் எடை அதிகபட்சமாக 750 கிலோ எடை வரையும், 15 அடி நீளமும் கொண்டது.

இந்த மீன் இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களின் வெப்பமண்டலம், மிதவெப்ப மண்டலங்களில் அதிகளவில் காணப்படுகிறது. கர்நாடக மீனவரின் வலையில் சிக்கிய ப்ளூ மர்லின் மீன் 5 அடி நீளம் கொண்டது ஆகும்.

ABOUT THE AUTHOR

...view details