இந்தியாவிற்கு 1947ஆம் ஆண்டில் சுதந்திரம் கிடைத்திருந்தாலும், 1951ஆம் ஆண்டில்தான் முதல் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், இமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் அலுவலராக பணியாற்றி வந்த ஷியாம் சரண் நேகி, தான் தேர்தல் அலுவலராக பணியாற்றிய வந்த அதே வாக்குசாவடியில் முதல் நபராக வாக்களித்தார்.
அன்று தொடங்கிய நெகியின் வாக்குப்பதிவு பயணம், இன்று வரை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஜூலை 1ஆம் தேதியான நேற்று தனது 104ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.
இது குறித்து அவர் கூறுகையில், "இதுவரை எந்தவொரு பெரிய நோயையும் நான் சந்திக்கவில்லை. எனது குடும்பத்தினரின் சரியான கவனிப்பால் எந்தவிதமான பிரச்னைகளையும் நான் எதிர்கொள்ளவில்லை. ஒருபோதும் எனது பிறந்த நாளை நான் கொண்டாட விரும்பமாட்டேன். ஆனால், தற்போது வெற்றிகரமாக 104ஆவது வயதை தாண்டியுள்ளேன். தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு அரசாங்க வீதிமுறைகளை பின்பற்றுங்கள்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:65 வயதானாலே தபால் வாக்கு- இந்திய தேர்தல் ஆணையம்