தமிழ்நாடு

tamil nadu

’கரோனாவிலிருந்து மீள்பவர்களின் சதவீதம் 24.56 ஆக உயர்ந்துள்ளது’

டெல்லி: கரோனாவிலிருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை 24.56 சதவீதமாக உயர்ந்துள்ளது என நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அலுவலர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

By

Published : Apr 30, 2020, 11:27 AM IST

Published : Apr 30, 2020, 11:27 AM IST

India's COVID-19
India's COVID-19

நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அலுவலர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”ஏழாயிரத்து 700 பேருக்கு மேல் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது.

கரோனாவிலிருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை ஏப்ரல் 19ஆம் தேதி 15 சதவீகமாகவும், ஏப்ரல் 26ஆம் தேதி 19.2 சதவீதமாகவும் இருந்தது. தற்போது 24.56 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஒரு நல்ல முன்னேற்றம் ஆகும்.

கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள், மாவட்டங்களில் நாம் அயராது உழைக்க வேண்டும். மீட்பு எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்த வேண்டும்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, கரோனா தொற்றால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 8 ஆக உயர்ந்துள்ளது. 31 ஆயிரத்து 757 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

22 ஆயிரத்து 982 சிகிச்சையில் உள்ளனர், ஏழாயிரத்து 796 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளனர் என அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இந்தியா கரோனாவை வெல்லும் - ஹர்ஷ் வர்தன்

ABOUT THE AUTHOR

...view details