2003ஆம் ஆண்டு சீனாவை உலுக்கிய சார்ஸ் நோய் (Severe Acute Respiratory Syndrome - SARS), 17 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவை மீண்டும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஒருவித கொடிய வைரஸால் இந்நோய் ஏற்படுகிறது. கொரோனா வைரஸானது மனிதர்களின் சுவாச உறுப்பான நுரையீரலை நேரடியாகத் தாக்குவதால், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.
முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட இந்நோய், 37 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. 2003இல் சீனாவில் மட்டும் 650 மக்கள் இந்நோயால் உயிரிழந்தனர். ஓரளவுக்கு கட்டுப்படுத்திய பின் மீண்டும் வந்துள்ள சார்ஸ் நோய் சீனாவில் இருவரின் உயிரைப் பறித்திருக்கிறது.
இந்நோய் தாக்கப்பட்ட 19 பேர் குணமடைந்துள்ளதாக சீனாவில் வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சீனாவில் வாழும் இந்தியப் பெண் ப்ரீத்தி மகேஷ்வரி என்பவரை இந்நோய் தாக்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேசப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரியும் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன.
இவர் சீனாவில் சார்ஸ் நோய் பாதிக்கப்பட்ட முதல் வெளிநாட்டவர் ஆவார். சீனாவில் சார்ஸ் நோய் வேகமாகப் பரவிவருவதால் கவனமாக இருக்குமாறு சீனா செல்லும் இந்தியர்களுக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வாஷிங்டனில் பெண்ணியவாதிகள் பேரணி!