தமிழ்நாடு

tamil nadu

இந்தியா கரோனாவை வெல்லும் - ஹர்ஷ் வர்தன்

டெல்லி: கொடிய வைரஸான கரோனாவை இந்தியா வெல்லும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

By

Published : Apr 30, 2020, 10:46 AM IST

Published : Apr 30, 2020, 10:46 AM IST

India
India

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் லயன்ஸ் கிளப் இன்டர்நேஷ்னல் உறுப்பினர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், பிரதமரின் கரோனா நிவாரண நிதிக்கு ரூ. 9.1 கோடியும், பல்வேறு மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.12.5 கோடியும் வழங்கியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி பல லட்சம் மக்களுக்கு தேவையான உணவு, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை கிடைப்பதற்கு காரணமாக அமைந்த அவர்களின் பங்களிப்பையும் பாராட்டிய அவர், கொடிய வைரஸான கரோனாவை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா வெற்றி பெறும் என தெரிவித்தார்.

இதபோல் சுகாதார அமைச்சகத்தின் செயலர் ப்ரீத்தி சூடான் பல்வேறு மாநிலங்கள், மாவட்ட அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர், ”கரோனா தொற்று இல்லாத மற்ற நோயாளிகளின் சிகிச்சையையும் கண்காணிக்க வேண்டும், அவர்களை புறக்கணிக்கக்கூடாது.

குறிப்பாக, டயாலிசிஸ், புற்றுநோய், நீரிழிவு நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து, அவர்களையும் கண்காணிக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: கரோனா மருத்துவம்: கிட்டத்தட்ட ரூ.6 லட்சம் ரசீது எழுதிய தனியார் மருத்துவமனை
!

ABOUT THE AUTHOR

...view details