தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மிஷன் சாகர் : கோவிட்-19 எதிர்கொள்ள ஐந்து நட்பு நாடுகளுக்கு மருத்துவ உதவி அனுப்பிய இந்தியா!

டெல்லி : கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள கொமொரோஸ், மடகாஸ்கர், மாலத்தீவுகள், மொரீஷியஸ், சீஷெல்ஸ் ஆகிய தீவுகளுக்கு மருத்துவப் பொருள்களை இந்திய அரசு அனுப்பியுள்ளது.

India sends medical assistance to five friendly nations
மிஷன் சாகர் : கோவிட்-19 எதிர்கொள்ள ஐந்து நட்பு நாடுகளுக்கு மருத்துவ உதவி அனுப்பிய இந்தியா!

By

Published : May 10, 2020, 11:28 PM IST

கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலகளவில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலை தடுக்க முடியாமல் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுகள் தவித்துவருகின்றன. கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோயால், மடகாஸ்கரில் 193பேரும்,மாலத்தீவில் 790பேரும்,மொரீஷியஸில் 332பேரும், கொமொரோஸில் 11பேரும் ,சீஷெல்ஸில் 11பேரும்பாதிக்கப்பட்டுள்ளனர்.

மிஷன் சாகர் : கோவிட்-19 எதிர்கொள்ள ஐந்து நட்பு நாடுகளுக்கு மருத்துவ உதவி அனுப்பிய இந்தியா!

நாளுக்குநாள் இந்த தீவுகளில் பாதிப்புகள் அதிகரித்துவருகின்றன. அதிகப்படியான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளாத காரணத்தால்தான் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார, மருத்துவ நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், இந்த இந்திய நட்புத் தீவுகளுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளும் செய்து தரப்படும் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து, அந்நாடுகளின் அரசு ஆலோசகர்கள், இந்திய தூதரக உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். பெருந்தொற்றை எதிர்கொள்ள ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள், ஆயுர்வேத மருந்துகள், கையுறை உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை இந்தியாவிலிருந்து, தனித்தனியாக இந்தியக் கடற்படையைச் சேர்ந்த கேசரி படைக்கப்பலில் எடுத்து சென்று வழங்கியுள்ளது. இந்தக் கப்பல் இந்தியாவின் தொற்றுநோயைச் சமாளிக்க நட்பு நாடுகளுக்கு உதவும் 'மிஷன் சாகர்' எனும் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :கரோனாவுக்கு எதிராக இந்தியாவும் இத்தாலியும் ஒன்றிணையும் - பிரதமர் மோடி உறுதி!

ABOUT THE AUTHOR

...view details