அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை நேற்று வெளியிட்டது. இந்தத் தீர்ப்பை விமர்சித்து, பாகிஸ்தான் வெளியுறவு செயலகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், நீதியை நிலைநாட்ட உச்ச நீதிமன்றம் தவறிவிட்டது என குற்றஞ்சாட்டியிருந்தது. மேலும், “வரலாற்று சிறப்புமிக்க பாபரி மஸ்ஜித் தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஆழ்ந்த கவலையுடன் குறிப்பிட்டுள்ளோம். இந்த முடிவு, மீண்டும் நீதிக்கான கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.
ஜம்மு-காஷ்மீரின் சூழலில் மனித உரிமைகள் மனுக்களுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் அளித்த பதில் கடுமையாக இல்லை. இதனை ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் தெரிவித்திருந்தது. அதேபோல் இந்த முடிவும் ஆகிவிட்டது. இந்தியாவில் சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்க முடியாது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.