அண்மை காலமாக ஜம்மு-காஷ்மீரில் அதிகரித்துவரும் பாகிஸ்தானின் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறிய தாக்குதல்களைக் குறிப்பிட்டு பேசியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாட்டு எல்லைக் கோடு நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்வதற்காக ஜம்மு-காஷ்மீர் பயணம் மேற்கொண்டுள்ள எம்.எம்.நாரவனே அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலை தடுக்கும் மத்திய மாநில அரசுகளின் முயற்சியில் ‘ஆபரேஷன் நமஸ்தே’ என்ற பெயரில் இந்திய ராணுவமும், தன் பங்குக்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
நமது நாட்டின் குடிமக்களுக்கு மட்டுமல்ல, பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் மருத்துவக் குழுக்களை, மருந்துகளை அனுப்பி, கரோனாவுக்கு எதிரான போரில் மும்முரமாக செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். மறுபுறம், பாகிஸ்தான் அரசோ பயங்கரவாதத்தை மட்டுமே ஏற்றுமதி செய்கிறது.
உலக நாடுகள் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் நேரத்தில், நமது அண்டை நாடு தொடர்ந்து தொல்லைகளை ஏற்படுத்துவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது." என கூறினார்.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது!
இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீருக்கு ராணுவ தளபதி திடீர் பயணம்